முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பணாம்பாக்கம் ஊராட்சி திப்புரெட்டி ஏரியில் குடிமராமத்து திட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள களையூர் திப்புரெட்டி ஏரியில் குடிமராமத்து திட்டத்தினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   முன்னிலையில்  துவக்கி வைத்தார்.2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நீர் ஆதாரப்பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் கொள்கையினைப் பின்பற்றி, வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய பணியாக மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குப்படுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடும் ஒரு பகுதியின் முதல்கட்டமாக பயனீட்டாளர்கனிளன் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய ‘குடிமராமத்து” திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பொதுப்பணித்துறைநீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள், மதகுகள், வழிந்தோடிகள், ஏரிக்கரைகள் மற்றும் வாய்க்கால்கள் மேம்படுத்துதல் மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 10 பொதுப்பணித்துறை ஏரிகளில் (களையூர் திப்புரெட்டி ஏரி, கொண்டங்கி ஏரி, தென்னம்பாக்கம் தாங்கள் ஏரி, ஒடலப்பட்டு ஏரி, தென்னம்பாக்கம் சிறிய ஏரி, ஒறையூர் ஏரி, ஆனைவாரி ஏரி, நெல்லிக்கொள்ளை ஏரி, வளையமாதேவி மற்றும் எரும்பூர் ஏரி) குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பணிகளுக்காக தமிழக அரசால் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.95 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர்  பேசியதாவது, கடலூர் மாவட்டத்தில் புதிய நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேண்மையை மேம்படுத்த இப்பணி தொடங்கப்படுகிறது. மேலும், இப்பணியின் மூலம் கிராமத்தின் வேளாண்மையை பெருக்கவும், குடிநீர் பஞ்சத்தை போக்கவும் கடலூர் மாவட்டத்திலுள்ள 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. இப்பணிகளில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முன்வந்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுபணித்துறை நீர்வளஅதாரத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நில உரிமையாளர்கள், கிராமத்து பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago