Idhayam Matrimony

விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.இல.சுப்பிரமணியன்,  தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தொடங்கி வைத்தார். குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்ததாவது:தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது.  இந்த வறட்சியினால் ஏற்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதற்காக மழைநீரை சேமித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்த, நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  இதனை குடிமராமத்து திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் முதல் கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய “குடிமராமத்து” திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  குடிமராமத்து என்பது பாசன அமைப்பு விவசாயிகள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் ஆகும்.  தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகால்சோழனால் கட்டப்பட்டு குடிமராமத்து மூலம் பராமரிக்கப்படும் கல்லணை இத்திட்டத்திற்கு முன்னோடியாகும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 101 ஏரிகளில், ரூ.808 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்விழாவில், வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்கரபாணி, செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் ஞானசேகர், விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago