குண்ணத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 119 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      வேலூர்
a MINISTER

ஆரணி அடுத்த குண்ணத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 119 மாணவர்களுக்கு சனிக்கிழமை விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு வழங்கினார். அமைச்சர் பேசியது, கல்வி வளர்ச்சிக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 14 திட்டங்களை அறிவித்து மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடைய திட்டங்கள் ஒதுக்கீடு செய்துள்ளார். விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, நோட்டு புத்தகம், கைப்பை உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் 88.35 சதவீதமும், 10ம் வகுப்பில் 88.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். மேலும் இந்த பள்ளி வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கை மனு கொடுத்தால் உடனடியாக நிறைவேற்றுகிறேன். என்று பேசினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமால், பாசறை நிர்வாகி அகிலேஷ்பாபு, பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி, குண்ணத்தூர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: