அதிமுகவினரின் நீர்மோர் பந்தல்: எம்எல்ஏகள் சு.ரவி, பார்த்தீபன் திறந்து வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      வேலூர்
Dt 020 AKM  POTO 02

அரக்கோணம் அருகே அதிமுகவினரின் நீர்மோர் பந்தலை இரண்டு எம்எல்ஏ- க்கள் திறந்து வைத்தனர் வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி காஞ்சிபுரம் சாலையில் அரிகலபாடி கூட்ரோடு உள்ளது. இங்கு அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வு நேற்று பிற்பகலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வந்திருந்தவர்களை ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் எல்.வினோத்குமார் வரவேற்றார். நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி தலைமை தாங்கி;. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான என்.ஜி;.பார்த்தீபனுடன் இணைந்து திரளான பொதுமக்களுக்கு நீர்மோர், பழவகைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி எம்.என்.நாகராஜன், கீழ்குப்பம் முனைவர் ஏ.எல்.நாகராஜன், கடம்பநல்லூர் தவைவர் சீனிவாசன், மற்றும் நாகவேடு தவைவர் எஸ்.எஸ்.முனுசாமி, அம்மா பேரவை செயலாளர் சங்கர், மாணவரணி வக்கில் பத்பநாபன், மற்றும் நெமிலி ஒன்றிய எல்.தினேஷ்குமார், அரக்கோணம் நகர பாசறை யோகானந்த், சாலை பழனி, அரக்கோணம் மாணிக்கவேலு, சேந்தமங்களம் சந்திரசேகர், சயனாவரம் சதாசிவம், மேல்பாக்கம் ரமேஷ், அரிகலாபாடி பாலகிருஷ்ணன், மதியழகன், நரிக்குறவர் தலைவர் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீர்மோர் பந்தலில் அன்னிய குளிர் பானங்கள் முற்றிலுமாக தவிர்க்கபட்டது குறிப்பிடதக்கது. இறுதியில் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்.

Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: