முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைச்சர் செல்லூர்.கே.ராஜீ தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி 18.03.2017 அன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், தலைமையில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜீ   தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
   தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட மற்றும் மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை சட்டமன்ற உறுப்பினர்; வி.வி.இராஜன் செல்லப்பா(மதுரை வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கூ.வேலச்சாமி மதுரை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.செந்தில்குமாரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்