தருமபுரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து திட்டப்பணிகள்: துணை கலெக்டர் ஜி.பஷீர் அகமது செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தர்மபுரி
4

 

தருமபுரி மாவட்டம், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; தருமபுரி வட்டம், குருபரஅள்ளி கிராமத்திற்குட்பட்ட ரூ.7.45 இலட்சம் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 10 சதவீதத்துடன் கூடிய குடிமராமத்து திட்டப்பணி, தருமபுரி வட்டத்திற்குட்பட்ட சத்திரத்தில் ரூ.7.45 இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 10 சதவீதத்தில் குடிமராமத்து திட்டப்பணி, என மொத்தம் 2 குளங்களில் ரூ.14.90 விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 20 சதவீதத்துடன் கூடிய குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (23.03.2017) துணை கலெக்டர் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலம்) ஜி. பஷீர் அகமது அவர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிங்காவேல் அவர்கள் பார்வையிட்டார்கள். செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் தெரிவித்ததவாது:- அம்மாவின் அரசு தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 13.03.2017 அன்று துவக்கி வைத்துள்ளார்கள். தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 21 ஏரிகள் உள்ளன. மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குருபரஅள்ளி மற்றும் சத்திரம் ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணியின் மூலம் ரூ. 1.56 கோடி மதிப்பில் 1406 ஹெக்டர் (3473 ஏக்கர்) விவசாய நிலங்கள் பயனடையும். அதனடிப்படையில் அனைத்து மாவட்டத்திலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரையிலும், நீர்த்தேங்கும் பரப்பிலும், வாய்க்கால்களில் உள்ள புல், பூண்டு, முட்புதர்கள் அகற்றுதல், ஏரிக்கரையை வலப்படுத்துதல், ஏரியின் வழங்கு வாய்க்கால்களிலும் மிகுதி நீர் செல்லும் படிந்துள்ள வண்டல்மண்ணை அகற்றுதல், தலைமை மதகு பழுது பார்த்தல் நீர்த்தேங்கும் பரப்பின் எல்லையில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்கும் முகமாக குழி வெட்டவும், அங்கு பனை மரங்களை நடவும் மராமத்து பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கோடை மழை பெய்யும் பொழுது மழைநீரை வீணாக்காமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்யும்பொழுது நிலத்தடிநீர் உயர்வது மட்டுமல்லாமல் விவசாய பாசனத்திற்கு இந்நீரை பயன்படுத்தலாம். இத்திட்டத்தின்மூலம் விவசாயிகள் பெரிதும் பயன்அடைவார்கள் என உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் அவர்கள் தெரிவித்தார்.செய்தியாளர்களின் பயணத்தின் போது உதவி பொறியாளர் ரத்னவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பெ. சதீஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம் மு. ஜனார்த்தனன், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: