ஓசூர் ராமநாயக்கன் ஏரி வளாகத்தில் தண்ணீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் இராமநாயக்கன் ஏரி வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக தண்ணீர் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடைபெற்றது.இதில் ஒசூர் வட்டாட்சியர் புஷன்குமார் அவர்கள் வரவேற்புரையும், ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் அவர்கள் முன்னிலையுரையும், ஓசூர் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையும் ஆற்றினார்கள். பின்பு ஒசூர் மக்கள் சங்கம் ஏரிகள் பராமரிப்பு குழு தலைவர் லட்சுமணன், வணிகர் சங்க அறக்கட்டளை தலைவர் தாமஸ், வுPளுழுர் தலைவர் பிரசாந்த், கிருஸ்டியா தலைவர் ராமலிங்கம், ஒசியா தலைவர் நடராஜன், ஐஆயு தலைவர் தனசேகரன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் செந்தூர்பாண்டியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், பேசும்பொழுது:உலக தண்ணீர் தினமானது மார்ச் - 22 அன்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீரின் தொன்மையை குறித்து ‘நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவர் அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். ஆகவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், வாய்கால் என நீர்நிலைகளை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து பயன்படுத்தி வந்ததோடு, நீர் ஆதாரத்தை உயர்த்தவும் காரணமாக இருந்தார்கள். இந்நிலையில் நாமும் ஒவ்வொரு ஊரில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்கள் ஆகிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறம்போக்கு நிலங்களான ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் மக்களின் சொத்தாகும். அதனை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.தண்ணீரை சிக்கனமாகவும், சேமிக்கவும் மழைப் பருவத்திற்கு முன்பே சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் அமைத்து விவசாயம் செய்யலாம். ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்; எனவும், நீரின் அவசியத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு, தண்ணீரை நாம் ஒவ்வொருவரும் சிக்கனத்தோடு பயன்படுத்த வேண்டும், சேமிக்க வேண்டும் என கலெக்டர் அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது ஆராதனா சமூக சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராதா, மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். விழா நிறைவில் சார் ஆட்சியரின் நேர் முக உதவியாளர் முத்துப்பாண்டி நன்றி தெரிவித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: