முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதவள மேம்பாட்டில் இந்தியாவுக்கு 131-வது இடம் : ஐக்கிய நாடுகள் சபை தகவல்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி  - சர்வதேச நாடுகளின் 2016-ம் ஆண்டுக்கான மனித வள மேம்பாட்டில் இந்தியா 131-வது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

188 நாடுகள்
சர்வதேச நாடுகளின் 2016-ம் ஆண்டுக்கான மனித வள மேம்பாடு பட்டியலை ஐ.நா. சபை வளர்ச்சி திட்டம் வெளியிட்டுள்ளது. அதில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு, கல்வி, மற்றும் தனி நபர் வருமானம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் நார்வே
அதில் நார்வே முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், சுவிட் சர்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன. ஆனால் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் அண்டைநாடுகளான இலங்கை 73-வது இடத்திலும் மாலத்தீவுகள் 105-வது இடத்திலும் உள்ளன. கபான் 109-வது இடத்தில் உள்ளது.

பாக்.கிற்கு 147-வது இடம்
எகிப்து 111-வது இடத்திலும், இந்தோனேசியா 113-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 119-வது இடத்திலும், ஈராக் 121-வது இடத்திலும் உள்ளன. சீனா 90-வது இடம் பிடித்துள்ளது. பூடானுக்கு 132-வது இடமும், வங்காள தேசத்துக்கு 139-வது இடமும், நேபாளத்துக்கு 144-வது இடமும், பாகிஸ்தானுக்கு 147-வது இடமும் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்