தி.மலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் திட்டப்பணி செயல்முறைப் போட்டி

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo06

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் மின்னனு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் திட்டப்பணி செயல்முறை போட்டி நேற்று நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வெ. சுப்ரமணிய பாரதி தலைமை தாங்க, மின்னனுவியல் துறைத்தலைவர் சரவணகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு இதுபோன்ற போட்டி நிகழ்ச்சி அவசியம் என்றும் மாணவர்கள் திறனை மேம்படுத்தவும் இவை பயனள்ள வகையில் அமையும் என்றார்.இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 35 மாணவ குழுக்கள் கலந்து கொண்டு தங்கள் செயல் திட்டங்களை சமர்பித்தனர். அவைகளால் இந்தியாவில் விரைவில் தொடங்கப்பட உள்ள ‘ஹைபர்லூப்’ எனும் புதிய ரயில் போக்குவரத்து திட்டத்தின் செயல்மாதிரி தானியங்கி முறையில் நீர்பாசனம் செய்தல்இ மாயமான முறையில் காணாமல் போகும் விமானங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் கண்டறிதல் முதலான திட்டப்பணிகள் குறித்து சமர்பித்தனர். மின்னியல் துறை பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ்பிரபு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறந்த திட்டப்பணிகளை தேர்ந்தெடுத்தனர். சிறந்த மூன்று திட்டப்பணிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் முனைவர். வெ. சுப்ரமணிய பாரதி, மாணவர் நலன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அன்புசெல்வன், தினகரன் மற்றும் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: