முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் இலக்கினை எட்டிய 4 துறை அலுவலர்களுக்கு வெள்ளிப்பதக்கங்கள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (03.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 452 மனுக்கள் வரப்பெற்றன.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட முன்னால் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் 2014- ஆம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கினை எய்திய 4 துறை அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்களின் நற்சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும், 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014- ஆம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கினை எய்திய 41 துறை அலுவலர்களுக்கு தமிழக அரசின் முதன்மைச்செயலர் அவர்களின் நற்சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 மகளிருக்கு தலா ரூ.3355 வீதம் ரூ.26,840 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,800 வீதம் ரூ.17,400- மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 31 மாற்றுத்திறனாளி களுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 பயனாளிகளுக்கு ரூ.44,240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கொடி நாள் நிதி வசூல் இலக்கு எய்தியதற்கான பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வெள்ளி பதக்கங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, முன்னால் படை வீரர் நல உதவி இயக்குநர் க.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன்; உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago