முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான அடையாள அட்டை குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கிட மத்திய அரசின் வலைதளத்தில் www.swalambancard.gov.in பதிவேற்றம் செய்தல் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது,இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகார அளிப்புத்துறை அமைச்சகம் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய அளவில் ஒரே மாதிரியான நவீன அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை தொடங்கி செய்து வருகிறது. ருனுஐனு- ருnஙைரந னளையடிடைவைல ஐனநனெவைல ஊயசன என்ற திட்டத்தின் கீழ் றறற.ளறயடயஅடியnஉயசன.பழஎ.in என்ற இணையதளம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்களை பதிவேற்றம் செய்திடுமாறு அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றது. அவ்வாறு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டவர்களின் விவரங்களை ருனுஐனு திட்டத்தின் கீழ் வலைதளத்தில் பதிவு செய்திடுமாறு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்திய அரசின் மேற்குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விவரங்களை பதிவு செய்ய ஒவ்வொரு மாற்றுத்திறனாளியிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பெற்றுள்ள மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டையின் நகல், கைப்பேசி எண், கல்வித்தகுதி, பணி விவரம், குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டையின் நகல், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளியின் கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்களை பெற்று பதிவேற்றம் செய்திட வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்தவுடன் கணினி பதிவு எண் கொண்ட ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். எனவே இதன்படி நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களும், மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இதுவரை 36,930 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை பெற்று மத்திய அரசின் மேற்குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு அவர்களுக்கு மத்திய அரசின் தேசிய அளவிலான ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் மாற்றுத்திறனாளிகளை ஒரே இடத்தில் கூட்டி நெருக்கடியை ஏற்படுத்தாமல் அந்தந்த கிராம அளவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய கணினி மயமான நவீன அடையாள அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் அனைத்து திட்டங்களும் எளிதில் பெற்று பயனடையலாம். எனவே இப்பணிகளை 2017 ஏப்;ரல் 30-க்குள் முடித்திட வேண்டுமென அனைத்து துறை அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார்.முன்னதாக வங்கிக்கடனுதவி பெற்று சுயதொழில் நடத்தி வரும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 வங்கிக்கடன் மானிய நிதியுதவிக்கான காசோலையினை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் க.சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், புதுவாழ்வுத்திட்ட மாவட்ட திட்ட மேலாளர் குமரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago