கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் (10.04.2017 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேலை வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 253 - மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 8- மனுக்களும் ஆக மொத்தம் 261 - மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக 22 - மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் துவங்க தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தாட்கோ துறை சார்பில் பவானி கஃபெ.லேட். சிவகுமார் என்பவருக்கு ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 100 மதிப்பில் இந்தியன் வங்கி கடனுதவியாக ஆட்டோவும் அதற்கு தாட்கோ மூலம் ரூ. 67 ஆயிரத்து 830 மானியமாக வழங்கப்படுகிறது. ஆட்டோவின் சாவியை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எச்.ரகமதுல்லா கான், உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், தனிதுணை கலெக்டர் (பொ) ரகுகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு குளோரியா, ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் வீ.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: