சகோதரருக்கு கட்சி பதவி :மாயாவதி விளக்கம்

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      அரசியல்
mayawati 2017 1 7

லக்னோ  - சகோதரருக்கு கட்சி பதவி  கொடுத்தது ஏன் என்று மாயாவதி விளக்கம்  அளித்துள்ளா்.பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தனது சகோதரர் ஆன்ந்த் குமாரை கட்சியின் தேசிய துணை தலைவராக நியமித்தார்.  வருமான வரித்துறை சோதனையில் ஆனந்த் குமார் சிக்கியுள்ள நிலையில், அவரை கட்சியின் முக்கிய பதவியில் மாயாவதி நியமித்துள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்ட பின், அவரது வங்கி கணக்கில் ரூ.1.43 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தினர்.
இது குறித்து லக்னோவில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மாயாவதி பேசியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக பாஜக மீது நான் குற்றம்சாட்டக் கூடாது, அந்த விவகாரத்தை எழுப்பக் கூடாது என்பதற்காகவே ஆளும் மாநில அரசு எனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடு பட்டு வருகிறது. நான் முதல்வராக பணியாற்றியபோது சர்க்கரை ஆலை விற்பனை மற்றும் நினைவிட கட்டுமானங்கள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசு விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. சர்க்கரை துறையை நசிமுதீன் தான் நிர்வகித்து வந்தார். எனக்கு அந்த துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவேன். 2014 நாடாளு மன்ற தேர்தலிலேயே இந்த முறைகேடு ஆரம்பித்து விட்டது. ஆனால் உ.பி., உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே நமக்கு தெரியவந்துள்ளது. கட்சியை பலப்படுத்த எனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசிய துணைத் தலைவராக நியமித்துள்ளேன். எம்.பி., எம்எல்ஏ, முதல்வர் உள்பட எந்தவொரு பொறுப்புக்கும் வரமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: