எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இரு மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைவு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடி வரை சரிந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வறண்டும்,பிரதான அருவி சினி அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், திடீர் நீர்வரத்து அதிகரிப்பினால், வறண்ட ஒகேனக்கல் அருவிகளில் சற்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


