எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு நேற்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுதாரர் தரப்பில் வாதத்தை முன்வைகத்து பேசிய வழக்கறிஞர், கரூர் தவெக கூட்ட நெரிசல் மற்றும் பெங்களூரு ஆர்சிபி கூட்ட நெரிசல் ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி.
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமான சோகம். இதற்கு மேல் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் மக்கள் வருவதைத் தடுப்பதும், தங்களுக்கான உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதும் எப்படி என்பதுதான் சவால். கூட்ட மேலாண்மை மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட மேலாண்மை, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பின் கீழ் வருகின்றது. இதற்கான கொள்கையை உருவாக்க துறைசார் வல்லுநர்களே பொருத்தமானவர்கள். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தையும் மனுதாரர் நாடியுள்ளார். இந்த மனுவை இந்த கட்டத்திலேயே முடித்து வைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக மனு அளிக்கலாம். அவர்கள் மனுவை பொருத்தமானதாகக் கருதினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


