Idhayam Matrimony

இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
EPS-1-2026-01-22

சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்துக்கு, தமிழக பா.ஜ.க. தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று காலை சென்றார். 

எடப்பாடி பழனிசாமி வீட்டில் நேற்று காலை அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. காலை விருந்துடன் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமா் மோடி தமிழகத்துக்கு இன்று வருகை தரவிருக்கும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் அ.ம.மு.க. இணைப்பு நடந்தது, நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், நேற்று தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த விருந்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானசி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக பேரவைத் தோ்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தும் பணியை அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

சென்னையில் புதன்கிழமை தமிழக பா.ஜ.க. தோ்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அன்புமணியின் பா.ம.க., அ.ம.மு.க. இணைந்துள்ள நிலையில், நேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து