முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க. போட்டியிடாத தொகுதிகளில் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கோ, அல்லது பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளுக்கோ விசில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிததுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு பிரச்சினை என கடும் நெருக்கடியில் இருக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு, தங்கள் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலை தந்திருக்கும்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கட்சியின் கணக்கு வழக்குகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்ததால், பதிவு செய்யப்பட்ட கட்சியாக த.வெ.க.வை அங்கீகரித்ததுடன் பொதுச் சின்னங்களில் இருந்து விசில் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் த.வெ.க.வுக்கு செக் ஒன்றையும் இந்திய தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. அதாவது, த.வெ.க. போட்டியிடாத தொகுதிகளில் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கோ, அல்லது பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளுக்கோ விசில் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதைவைத்து பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் த.வெ.க. போட்டியிட்டால், விசில் சின்னத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும்போது, அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் மாற்றுக்கட்சியினருக்கு விசில் சின்னம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைய வாய்ப்பு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து