பொதுவேலை நிறுத்தம் தமாகா பங்கேற்காது : வாசன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      அரசியல்
GK Vasan(N)

சென்னை  - தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்தில் தமாகா பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்ததாலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக மே மாதம் 25 ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அய்யாக்கண்ணு அறிவித்திருக்கிறார். இந்நிலையில் விவசாயிகளின் போரட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதால் தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் என்பது உண்மையிலேயே பொது மக்களை பாதிக்கும்.

த.மா.கா. வைப் பொறுத்த மட்டில் விவசாயிகளுக்காக என்றுமே குரல் கொடுக்கும், ஆதரவு அளிக்கும், போராடும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தற்போது டில்லியில் தமிழக விவசாயிகள் நம்பிக்கையோடு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். அந்த நம்பிக்கையோடு விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு பொது மக்கள் நலன் கருதி, மாநில அரசின் நலன் கருதி, நாட்டு நலன் கருதி தமிழகத்தில் இன்று நடைபெற இருக்கின்ற பொது வேலை நிறுத்தத்தில் த.மா.கா. பங்கேற்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: