முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் பேருந்து, ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      நீலகிரி

ஊட்டியில் பேருந்து, ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் ஊட்டியில் காலை முதலே அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் மருந்துக்கடைகள், அரசு நிறுவனங்கள் திறந்திருந்தன. உணவகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மூடப்பட்டிருந்தது. பெரும்பாலான உணவகங்கள் இரண்டு மணிமுதல் திறக்க ஆரம்பித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு கிடைப்பதில் பெருத்த பாதிப்பில்லை. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், ஓட்டல்களுக்குள் இயங்கி வந்த உணவகங்கள் திறந்திருந்தன.

பொதுவாக பந்த் என்றாலே ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படும். ஆனால் நேற்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று நடைபெற்ற பந்தினால் ஊட்டியில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago