முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளில் ரூ. 55.19 லட்சம் வளர்ச்சிப் பணிகள்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளில் ரூ. 55.19 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ.  தொடக்கி வைத்தார். ஈரோடு மேற்கு தொகுதிக்கு உள்பட்ட சித்தோடு அருகே பச்சப்பாளி முதல் கவுந்தப்பாடி சாலை வரை 2016-17 ஆம் ஆண்டுக்கான தாய் திட்டத்தின்கீழ் 2.17 கி.மீ. தொலைவுக்கான தார் சாலை ரூ. 22.39 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அவர் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, பச்சப்பாளியில் ரூ. 3.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர்க் குழாய், சூரம்பட்டிவலசு எம்.எஸ்.கே.நகர், அம்பிகா நகர் பகுதிகளில் ரூ. 9.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர்க் குழாயை திறந்து வைத்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து மாநகராட்சிக்கு உள்பட்ட 24, 25-ஆவது வார்டுகளில் புதிய அங்கன்வாடி அமைக்க ரூ. 7 லட்சமும், புதிய நியாய விலைக் கடை கட்ட ரூ. 7.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை பணிகளை இராமலிங்கம்எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, கிழக்கு தொகுதிஎம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தார்.தொடர்ந்து, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. இதில், சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், காசிபாளையம் பகுதிச் செயலர் கோவிந்தன், சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago