முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறியும் மாணவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : மத்திய அரசின் புதிய திட்டம்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு புதுமையான, உண்மையான, நடைமுறைப்படுத்த முடிகிற தீர்வுகளைக் கண்டறியும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு ரூ.1 கோடி பரிசளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.  இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியபோது, ''பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்ட மாணவர்கள் உரிய சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளது.

உடல்நலம், கணினி, தொழில்நுட்பம், ஆற்றல் உருவாக்கம் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய, காற்று, அலை ஆற்றல்கள்), குறைந்த விலையில் வீடுகள், மலிவு விலை மருந்துகள், கல்வி, விவசாயம், நீர் ஆதாரங்கள், ஆற்றுப் பாசனங்கள், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, சூழலியல் மற்றும் பருவநிலை மாற்றங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க தீர்வுகளைக் கண்டறியும் மாணவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

ஐ.டி.யாஸ் (Innovations for Development of Efficient and Affordable Systems) என்னும் திட்டத்தின் கீழ் மேற்கண்ட துறைகளில் தலைசிறந்த தீர்வுகளைக் கண்டறியும் ஒவ்வொரு துறை மாணவருக்கும் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும்.

பிரச்சினைகள் குறித்த அறிக்கை
மேற்கூறப்பட்டுள்ள அனைத்துத் துறைகள் அல்லது கருப்பொருள்களுக்கு, 10 பிரச்சினைகளை உள்ளடக்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டு, விளம்பரப்படுத்தப்படும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இதில் கலந்துகொள்ளலாம். குறிப்பாக ஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ ஆகிய கல்வி நிறுவனங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago