எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தூர்வாருதல்
இக்கூட்டத்தில், மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், நீர்வழி தடங்களை முறைப்படுத்துதல் மற்றும் குளக்கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் மற்றும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாகவும் பொதுப்பணித் துறையினர், அரசு துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டமிட்டு இப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்கள். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிரி, பொதுப்பணித்துறை அலுவலர்கள், வெற்றி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


