கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
Hen-eggs

Source: provided

நாட்டுக்கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்துக்கு தேவையான புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டவும் சிறந்த சுய வேலை வாய்ப்பு தொழிலாகவும் உள்ளது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகமாக இருந்த போதிலும் நாட்டுக்கோழி இறைச்சி உண்ணும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறைந்த கொழுப்பு சத்து உள்ள ருசியான இறைச்சியே இதற்க்கு காரணம்.

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி வளர்ப்பு கிராம மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறது. நாட்டுக்கோழிகள் எவ்வகையான சூழ்நிலையிலும் வளரக்கூடிய திறன் கொண்டவை. நம்நாட்டில் ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அவற்றின் மூதாதையரான செந்நிற நாட்டுக்கோழிகள் வம்சாவளி வந்தவை. நாட்டுக்கோழிகளில் அசீல், சிட்டகாங், பஸ்ரா, நிக்கோபாரி, கடக்நாத், கிராப் கோழிகள், சில்பா கோழிகள், குருவு கோழிகள் மற்றும் பெருஞ்சாதி கோழிகள் இந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகின்றன.

நாட்டுக் கோழிகளை வளர்க்கும் முறைகள்  : நாட்டுக்கோழிகளை தீவிர முறை, புறக்கடை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டு கோழிகள் என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம்.  தீவிர முறை வளர்ப்பில் அசீல் மற்றும் அசீல் கலப்பினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புறக்கடை வளர்ப்பில் நந்தனம் கோழிகள், நாமக்கல் கோழி, வனராஜா, கிரிராஜா மற்றும் கிராமப்ரிய போன்ற தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழிகளை வளர்க்கலாம். . தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் குறைந்த செலவிலான கொட்டகை அமைப்பு, சத்துக்கள் குறைந்த தீவனம் மற்றும் கணக்கான பராமரிப்பு முறைகளிலும் நன்கு வளரக்கூடியது. தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் முட்டைகள் நாட்டு கோழிகளின் முட்டையைவிட அதிக எடையும். அதிக கருவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை.

கிராமங்களில் பெரும்பாலும் நாட்டுக்கோழிகள் முறையான பராமரிப்பு ஏதுமின்றி புறக்கடை முறையிலேயே வளர்க்கப்படுகின்றன, இரவில் கோழிகளை கூடையிலோ, பஞ்சாரத்திலோ, திண்ணைக்கு கீழ் உள்ள இடத்திலோ அல்லது மரத்திலான சிறிய கூண்டுகளில் அடைத்து பின் காலையில் புறக்கடையில் விடுவர். பலரது நாட்டுக்கோழிகள் அவர்களது வீட்டுக்கூரையின் மேல் பகுதியிலும், அருகில் உள்ள மரங்களின் கிளைகளிலும் அடைத்து இரவை கழிகின்றன.

கொட்டகை அமைப்பு  : பொதுவாக நாட்டுக் கோழிகளுக்கு அதிக செலவிலான ப்ரேதேய்க கொட்டகைகள் எதுவும் தேவைப்படுவதில்லை. இருப்பினும் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்கோழிகளை வளர்க்கும்போது பண்ணையாளர்கள் குறைந்த செலவில் எளிமையான கொட்டகைகள் அமைத்து வளர்த்தால் அதிக லாபம் பெறமுடியும். நாட்டுக்கோழிகளைபெரிய வணிகநோக்கில் வளர்க்க முற்படும்போது ஆழ்கூளம் மற்றும் கூண்டு முறையில் வளர்க்கலாம்.

பண்ணை அமையக்கூடிய இடத்தில நீர் ஆதாரம், மின்சார வசதி , விற்பனை வாய்ப்பு முதலியன உள்ளனவா என்பதை பண்ணையாளர்கள் அறிந்துகொள்ளவேண்டும். வளர்க்க திட்டமிடப்பட்டுள்ள நாட்டுக்கோழிகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பண்ணை வீடுகளை அமைக்க வேண்டும்.
சிமெண்ட் தரை கொண்ட கொட்டகையிவ் நெல் உமி, மரத்தூள் , தேங்காய் நார் கழிவு அல்லது கடலைத்தோல் போன்றவற்றில் எதாவதொன்றை ஆழ்கூளமாக பயன்படுத்தி நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்.

மேலும் ஆழ்கூள பொருட்கள் விரைவில் நன்றாக ஈரத்தை உறிஞ்ச கூடியதாக இருக்க வேண்டும். பின்பு விரைவில் நன்றாக உளறக்கூடியதாக இருத்தல் நலம். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகாமல் தடுக்க தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கொட்டகையின் காற்றோட்டம், நாட்டுக் கோழிகளின் வயது, எண்ணிக்கை, எடை, தட்பவெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். ஆழ்கூளத்தை குறைந்தது அரை அடி உயரத்திற்கு அமைக்க வேண்டும்.

கூண்டு முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு : கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பது தொழில் நுட்ப உத்திகளில் மிகவும் முக்கியமானதாகும். தொடக்க காலத்தில் , நாட்டுக்கோழிகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் பொது ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் பராமரிக்கும் செலவு குறைவாகும். கூண்டு முறை வளர்ப்பில், கொட்டகையின் மைய உயரம் குறைந்த பட்சம் 12 முதல் 15 அடி இருக்கும்படி அமைக்க வேண்டும்.

ஆழ்கூள முறையில் 1 அடி சுவர் பக்கவாட்டில் அமைப்பது போல் கூண்டு முறையில் அம்மைக்கத்தேவையில்லை. மேலிருந்து கீழ்ப்பகுதி வரை கம்பி வலை கொண்டு 6 அடி உயரத்திற்கு குறையாமல் அமைத்தால் தரை மட்ட அளவில் நல்ல காற்றோட்டம் இருக்கும். அப்போது எச்சத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி எச்சம் நன்கு உலர்ந்து காணப்படும். நாட்டுக்கோழிகளின் எச்சம் கூண்டு வழியாகக் கீழே விழுந்து விடுவதால் எச்சத்திற்கும், நாட்டுக்கோழிக்கும் தொடர்பு இருப்பதில்லை ஆழ்கூளம் வாங்கும் செலவும், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டிய சிரமங்களும் கூண்டு வளர்ப்பில் கிடையாது.

சில்லரை விற்பனைக்காக ஆழ்கூள வளர்ப்பில் அடிக்கடி கோழிகளை விரட்டிப் பிடிப்பதால் அவற்றிக்கு அழற்சி ஏற்படுகிறது.
கூண்டு முறையில் வளர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த பராமரிப்பு எளிதாகிவிடுகிறது. கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்க்க முற்படும்போது கட்டிடத்தின் மைய உயரத்தை அதிகரித்துத் .கட்டுவதனால் வெயில் காலங்களில் ஏற்படும் வெப்ப அழற்சியை தவிர்க்கலாம். 3 அடி உயரம் 3 அடி அகலம் மற்றும் 1.5 அடி உயரமுள்ள கூண்டில், ஒரு மாத வயது வரை 30 கோழிகளையும், 40 நாட்கள் வரை 15 கோழிகளையும், 50 நாட்களுக்கு மேல் விற்பனை வயது வரை 10 கோழிகளையும் வளர்க்கலாம்.

மேலும், கொட்டகையை கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களை கூரை வரை உயர்த்தி கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும். நல்ல ஆழத்தில் மிகவும் திடமான அடித்தளம் இருக்க வேண்டும். 12 அடி உயரமுள்ள கட்டிடத்தை தாங்கும் பலமுடையதாகவும், எலி , பெருச்சாளி போன்றவை வலை தோண்ட இயலாத வண்ணம் திடமாகவும் இருக்க வேண்டும். நிரந்தர கோழி வளர்ப்புக் கட்டிடங்களுக்கு கான்க்ரீட்டால் ஆனா அடித்தளமும், தரையும் அமைக்க வேண்டும்.

கோழிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கட்டிடங்களின் நீளத்தை தேவையான அளவுக்கு நீட்டி அமைத்து கொள்ளலாம். ஆனால் கட்டிடங்களின் அகலம் 25 அடிக்கு மேல் அமையாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். அப்போதுதான் காற்று ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளியேறி கோழிகள் முழு நலத்துடன் வளரமுடியும். கோழி வளர்க்கும் கட்டிடங்களின் தரைப்பகுதி, வெப்பக் காலங்களில் அதிகமான வெப்பத்தைக் கவர்ந்து எளிதில் சூடாகி விடாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் ஓரளவு கதகதப்புடன் இருக்க வேண்டும். கட்டிடத்தின் உட்புற தரைப்பகுதி, வெளியில் உள்ள நிலமட்டத்தை விட ஒரு அடி உயரமாக இருக்க வேண்டும்.

அதனால் மழைக்காலங்களில் வெளிப்புறம் தேங்கும் நீர் உட்புறம் கசிந்து வராமல் இருக்கும். உட்புறம் ஈரமாக இருந்தால், அது நோய் கிருமிகள் எளிதில் வளர்ந்து பெருகிப் பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகிவிடும். பேன், உண்ணி போன்றவற்றிக்கு இடம் கொடுக்காதவாறு தரைப்பகுதி விரிசல் இல்லாமல் சீராக இருக்கவேண்டும். பக்கவாட்டு சுவர்கள், கட்ட்டிடத்தின் உட்புற வெளிச்சத்தையும், காற்றோட்டத்தையும் பாதிக்காத வண்ணம் அமைக்கப்படவேண்டும்.

அதற்க்கு மேல் உள்ள பகுதி முழுமையும் கம்பி வலை அல்லது இணைப்புக் கம்பிகள் மூலம் அடைக்கப்படவேண்டும். கோழி பண்ணையின் கூரை அமைப்பைத் தங்களது வசதிக்கேற்ப பண்ணையாளர்கள் அமைத்துக் கொள்ளலாம். கீற்றுகள், கல்நார் ஓடுகள், மங்களூர் ஓடுகள், அலுமினியத் தகடுகள் ஆகியவற்றை கூரை பொருட்களாகப் பயன்படுத்தலாம்.

ஆஸ்பெஸ்ட்டாஸ் அல்லது ஒட்டுக் கூரை அமைத்தால், பக்கவாட்டுப் பகுதியில் கட்டிடத்தின் உயரம் குறைந்தது 8 அடி இருத்தல் வேண்டும். கூரை வீடுகளில் பக்கவாட்டுப் பகுதி 6 அடி வரை இருந்தாலே போதுமானது. இதில் சுவர் அமைத்த ஒரு அடி நீங்கலாக மீதி பகுதியை வலை போட்டு மறைக்க வேண்டும். கம்பி வலையை மரச்சட்டங்களில் பொறுத்தியும் பக்கவாட்டில் நிற்கவும் வைக்கலாம். மரச்சட்டங்களில் வார்னிஷ் அல்லது தார் பூசி விட்டால் அதனைக் கரையான் அரிப்பிலுருந்து காப்பற்றலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம். தொலைபேசி 0427-2410408.

தொகுப்பு: மருத்துவர் பி.ஸ்ரீபாலாஜி

முனைவர் து.ஜெயந்தி,

முனைவர் ப.ரவி

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: