முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      சினிமா
Arjun-Aishwarya 2025-11-17

Source: provided

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’. ஜி.எஸ் ஆர்ட்ஸ் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு என்.பி.கே.எஸ், ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். நவம்பர் 21  ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை மற்றும்  ஊடகத்தினரை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசுகையில், நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன்.  அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படம் எடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். மக்களுக்குப் இப்படம் பெரிய விழிப்புணர்வை தரும் என்றார். பின்னர், அர்ஜூன் பேசுகையில், தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து