சென்னையில்14 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      சென்னை

 

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என 14 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர்கரன்சின்கா, உத்தரவிட்டார்.

வழக்குகள்

1.டிஜு ஜேம்ஸ் (எ) சரத், வ/26, நிலகிரி மாவட்டம், 2. நாதன் (எ) உலகநாதன் (எ) சத்தியநாதன், வ/36, கோடம்பாக்கம் 3.முகமது யூசுப், வ/33, தண்டையார்பேட்டை 4. ஆறுமுகம், வ/32, செனாய் நகர் 5.மணி (எ) அண்ணாதுரை, வ/24, அரும்பாக்கம் 6. கணேஷ், வ/27, சங்கராபுரம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் 7.ராஜமணிக்கம், வ/32, எண்ணூர் 8. மாதவன், வ/48,கொளத்தூர் 9.ஜாகீர் உசேன் (எ) ராஜி, வ/42, பலக்காடு , கேரளா மாநிலம் 10.சசிகுமார்,வ/37 சலவன்பேட்டை, வேலூர் மாவட்டம் 11. பிரபாகரன் (எ) பிரபு, வ/26, மன்னார்குடி தாலுகா, திருவாரூர் மாவட்டம் 12. மணி, வ/29, சைதாப்பேட்டை 13.அந்தோணி செல்வசுதன், வ/24, அயனாவரம் என்பவர் மீது 14.கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி வ/31, கண்ணகி நகர், துரைப்பாக்கம் டிஜு ஜேம்ஸ் (எ) சரத், நாதன் (எ) உலகநாதன் (எ) சத்தியநாதன் ஆகிய இருவர் மீது மத்தியகுற்றப்பிரிவு விபச்சார தடுப்புபிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகமது யூசுப் என்பவர் மீது சென்னை மத்தியகுற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்பு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகம், மணி (எ) அண்ணாதுரை, கணேஷ் ஆகிய மூவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது ராஜமணிக்கம் மாதவன், ஜாகீர் உசேன் ஆகிய மூவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் திருட்டு, செயின்பறிப்பு, மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. சசிகுமார் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்திலும் பிரபாகரன் (எ) பிரபு என்பவர் மீது எஸ்-13 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. மணி என்பவர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. அந்தோணி (எ) செல்வசுதன் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளது. கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது செயின்பறிப்பு, மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: