உச்சிமேடு ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      கடலூர்
cud collector kirama sabhaa koottam 2017 05 01

 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியம் உச்சிமேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ் கலந்து கொண்டார்

 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சிமேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ் பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கிராமசபைக் கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் முருகன் தீர்மானங்களை வாசிக்க, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலெக்டர் கிராம சபைக்கூட்டத்தில் தெரிவித்ததாவது,

25 சதவீத இட ஒதுக்கீடு

உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து தங்கள் வீடுகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கழிப்பிடங்களை கட்டி அதை பயன்படுத்தவேண்டும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பு) குறைந்த பட்சம் 25மூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நலத்திட்ட உதவிகள்

கலெக்டர் பிரதான் மந்திரி ஆவாஸ்; யோஜனா திட்டத்தின் கீழ் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு முழு மானியத்துடன் (தலா ரூ.1,70,000- மதிப்பீட்டில்) வீடுகள் கட்டி தருவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.முன்னதாக கலெக்டர் உச்சிமேடு கிராம மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு உச்சிமேடு கிராமத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ.11.75 இலட்சம் மதிப்பீட்டில் 740 அடி மாற்று ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பலர் பங்கேற்பு

இந்த கிராம சபைக் கூட்டத்தில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.ஆனந்தன், வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குர்ஷித் பேகம், உதவி பொறியாளர் கல்யாணி, தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: