முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளைகளை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்பும் பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகும்.இந்த ஒரு பெருமைக்காகவே அன்றாடம் ஏழை பெற்றோரில் இருந்து பணம் படைத்த பெற்றோர் வரைக்கும், என்னவானாலும் சரி , எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி பெற்ற பிள்ளைக்கு கல்வியை கொடுத்தே ஆகுவது என்ற திடமான மனதில் வாழும் பெற்றோர்கள் இந்த பூமியில் எத்தனையோ பேர் உள்ளனர்.

அதிலும் சில காரணங்களுக்காக அல்லது பிள்ளையின் எதிர்கால நன்மை கருதியோ பல பெற்றோர் மேல் படிப்பிற்காக பிள்ளையை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்புகின்றார்கள். எந்தவொரு திட்டமிடல் இன்றியும் அவசரம் அவசரமாக பிள்ளையை வெளிநாட்டில் படிக்க அனுப்புவதால் பல பெற்றோர்களும், பிள்ளைகளும் வாழ்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பெற்றோர் கட்டாயம் இந்த முக்கிய விடயங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.

முதலில் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் உங்கள் பிள்ளைக்கு பொருத்தமான நாட்டை பற்றியும் கல்லுரி (காலேஜ்) பற்றியும் தெளிவான ஆய்வு செய்தல் வேண்டும். அதிலும் முக்கியமாக உங்கள் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு கல்லுரியை தெரிவு செய்தல் வேண்டும். காரணம் நாடுகளுக்கு நாடுகள், கல்லூரிக்கு கல்லூரிக்கு இடையே குறித்த பாடத்திட்டதிக்கான கட்டணங்கள் வேறுபாடும். உதாரணமாக மருத்துவ பாடத்திற்கு சில கல்லூரிகளில் அதிக கட்டணமும் சில கல்லூரிகளில் குறைவான கட்டணமும் அறவிடப்படும். முடிந்தவரை உதவித்தொகையில் (Scholarship) அல்லது வேறு வழி முறைகளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் பயன்படக்கூடியவாறு தெரிவு செய்தல் மிகவும் நல்லது

அடுத்து தெரிவு செய்ய வேண்டிய நாட்டின் கலாச்சார, சமுக நிலைமைகளில் அங்கு உங்கள் பிள்ளையால் சமாளித்து வாழ முடியுமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் . கல்வி கற்பதன் காரணமாக செல்வதால் பிள்ளை உங்களை பிரிந்து நீண்ட நாட்கள் அங்கே தங்கி கல்வி கற்ற வேண்டியிருக்கும் அதலால் இந்த விஷயத்தில் கவனியாதிருத்தல் பிள்ளைக்கும் உங்களுக்கும் உகந்தது அல்ல.
வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய பின்னர் பிள்ளையின் கல்வி பெறுபேறுகளை அவசியம் கவனித்தல் வேண்டும். அவனால்/அவளால் தெரிவு செய்த பாடத்தில் தனித் திறமையும், ஆளுமையும் உண்டா? என்பதை அவதானியுங்கள். காரணம் நீங்கள் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க பிள்ளை கல்வியில் கவனம் செலுத்தாமலோ அல்லது குறித்த படத்தில் தன் திறமையை நிருபிக்க கஷ்டப்பட்டாலோ செலவழித்த காலமும் பணமும் தேவை அற்றதாகிவிடும்.

வெளிநாட்டில் பிள்ளையை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு சில குறிப்புக்கள் :

பிள்ளை படிக்க செல்லும் இடத்தை சரியான முறையில் தெரிவு செய்யுங்கள் அதோடு கருத்துரை நிலையங்களுக்கு செல்லுங்கள் மற்றும் இணையத்தில் சம்பத்தப்பட்ட உதவிகளை பெற்று கொள்ளுங்கள். விசா மற்றும் இதற ஆவணங்களில் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள். பண ரீதியான பிரச்சனைகளை தவிர்க்க வங்கியில் கடன் பெற்று பிள்ளையின் படிப்பை பாதிக்காதவாறு நிதி நிலைமைகளை கவனித்துக்கொள்ளுங்கள். படிப்பிற்கு,சாப்பாட்டிற்கு , தங்குமிடத்திற்கு, வேறு செலவு என்று ஒருவருடத்திற்கு 5000 டாலர் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், முடியவில்லை என்றால் உடனே உரிய தீர்வை எடுத்துவிடுங்கள்.

பிள்ளை சென்ற நாட்டை பற்றியும் , கலாச்சார விஷயங்கள் பற்றியும் அடிக்கடி கலந்துரையாடுங்கள். தொடர்ந்து தொலை துரம் சென்ற பிள்ளையுடன் அழைப்பிலும், இணையம் மூலமும் தொடர்பில் இருங்கள். இறுதியாக ஒன்று பணம் இல்லை என்றால் தயவு செய்து வெளிநாட்டு படிப்பை தெரிவு செய்யவேண்டாம். இங்கே முக்கிய பங்கு வகிப்பது பணமே, நிதிப்பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரியான தீர்க்கமான முடிவை எடுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் சிந்தித்து பயன் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்