ஓட்டேரி பகுதியில் பூஜை செய்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த மூன்று வெளிமாநில வாலிபர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      சென்னை

சென்னை, ஓட்டேரி, தாசமகான் 4வது தெரு, எண்.32 என்ற முகவரியில் முகமது இப்ராகிம், /51, என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தீனம் வீட்டிலிருந்த போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 விசாரணை

அதனை நம்பிய முகமது இப்ராகிம் வீட்டிற்குள் மூன்று வாலிபர்களையும் பூஜை செய்ய அனுமதித்துள்ளார். மேற்படி மூன்று வாலிபர்களும் பூஜையை முடிந்து விட்டு, அதற்கு கூலியாக ரூ.2500/-ஐ மேற்படி முகமது இப்ராகிடமிருந்து பெற்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் முகமுது இப்ராகிம் மேற்படி வாலிபர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடுத்த ரூ.2,500/- பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பூஜை செய்த பின்பு பணத்தை கேட்டால் பணத்தை திரும்ப தரமுடியாது என கூறியுள்ளனர். மேலும் பணத்தை திரும்ப கேட்டால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என கூறி மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக முகமது இப்ராகிம் உடனே ப்பி-2 ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஓட்டேரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி மூன்று வாலிபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர்களின் பெயர் 1.தீபக், /24, () இஸ்மாயில், உள்ளாபாத் தாலுகா, மிதர் மாவட்டம், கர்நாடகா 2.தசரத் () முகமது ஜாகீர், /24, மிதர் மாவட்டம், கர்நாடகா 3.அர்ஜுன், /24, மிதர் மாவட்டம், கர்நாடகா மாவட்டம் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பணம் ரூ.2,500/- பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: