நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவன பராமரிப்பு

புதன்கிழமை, 3 மே 2017      வேளாண் பூமி
kozikozi

Source: provided

நாட்டுக்கோழி வளர்ப்பில்  செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.

குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும். முதலில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குஞ்சுக்கு வெப்பம் அளிக்கக்கூடிய மின்சார பல்புகளை பொறுத்த வேன்டும். குஞ்சுகளை வளர்க்க ப்ரூடெர் தகடுகள் அல்லது அட்டைகள் அல்லது பந்திப் பாய்களை ஒன்றோடொன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது. இந்த அடைக்கப்பனுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது மர இழைப்புச் சுருள் அல்லது கடலை தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பிவிடவேண்டும். பொதுவாக குளிர் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. முதல் வாரத்தில் குஞ்சுகள் சௌகரியமாக இருக்கும் படி மின் விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை சரி செய்யவேண்டும்.

செயற்கை வெப்பம் அளித்திட 60 வாட்ஸ் மின்விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைகேற்றார் போல் செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தால் வேண்டும். தேவையான வெப்ப அளவில் குஞ்சுகள் பரவலாக இருக்கும். செயற்கை வெப்பம் அளிக்க்க மின்சாரம் இல்லாத சமயங்களில் கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து அல்லது பானைகளை வைத்து குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பத்தை அளிக்கலாம். அடைகாப்பனுக்குள் எந்த நேரமும் 50 சதவீத கோழிகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டு கொண்டும் , சுறுசுறுப்பாக சுற்றி திரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.

தீவன பராமரிப்பு : குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிர் உயிரி மருந்தும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்ஸ் மற்றும் வைட்டமின் எ கலவையும் கலந்து கொடுக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு கூண்டின் மேற்பகுதியில் ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் வீதம் கணக்கிட்டு மின் விளக்கு பொருத்தி குறைந்தது முதல் ஒரு வாரம் வெப்பம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

உடலிலுள்ள தண்ணீர் தொடர்ச்சியாக தோல், சுவாசம் மற்றும் எச்சத்தின் மூலமும் வெளியேறிக்கொண்டு இருப்பதால் அதை ஈடு செய்வதற்கு எந்நேரமும் கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் தீவன உபகரணங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.

பொதுவாக புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சமசீரான தீவனம் அளிக்கப்படுவதில்லை. நாட்டுக்கோழிகள் சமையலறை கழிவுகள், சோறு, காய்கறிகள், வெங்காயம், ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. இதை தவிர வீட்டில் உள்ள உடைந்த மற்றும் உபரியான தானியங்களான நெல், அரிசி,கம்பு, சோளம், கோதுமை, அரிசிகுருணை, தவிடு, ஆகியவற்றை உட்கொள்கின்றன. மேலும் பூச்சி, புழு, கரையான்,எறும்பு, கீரைகள், புல் பூண்டு முதலியவற்றை உட்கொள்கின்றன. இவற்றை உண்பதன் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஓரளவிற்கு புரத சத்து கிடைத்தாலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை.

எனினும் தானியங்கள் , பிண்ணாக்கு, தவிடு,, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் கொண்டு தயாரித்த அணைத்து ஊட்ட சத்துகளும் அடங்கிய சமசீர் தீவனம் அளிப்பதன் மூலம் நாட்டு கோழிகள் விரைவில் விற்பனை எடையை அடைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கிறது. முதல் 8 வாரங்களுக்கு குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும், சுட வைத்து ஆறவைத்த சுத்தமான தண்ணீர் அணைத்து நேரங்களிலும் குஞ்சுகளுக்கு கிடைக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். வளர் நாட்டு கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியும் , புரதத்தின் அளவு 22 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் 2 சதவீதம் கிளிஞ்சல் அளிக்கப்பட வேண்டும்.

இனப்பெருக்க பராமரிப்பு : இன சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு 10 பெட்டைக் கோழிகளை பயன்படுத்தலாம். நல்ல ஆரோக்கியமான அதிக வீரியமுள்ள சேவலையே தேர்வு செய்து இனவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும். இதனால் நல்ல திரட்சியான குஞ்சுகளை பொரிக்க முடியும். வீரியமுள்ள சேவலைத் தேர்வு செய்து அதனை தனியாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் பராமரித்து, சரிவிகித உணவு கொடுத்து அதனிடமிருந்து அறிவியல் தொழிநுட்ப முறையில் விந்துவை பெற்று செயற்கை முறை கருவூட்டல் மூலம் அதிக அளவு கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்து, அதிகப்படியான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

பெட்டை கோழிகளுக்கு ஒரு நாளில் இயற்க்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து, சுமார் 16 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்டை கோழிகள் தேவையான செயற்கை ஒளி பெற 100 சதுர அடிக்கு ஒரு 60 வாட்ஸ் மின் விளக்கு பொருத்துவது அவசியம்.

செயற்கை ஒளியைக் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். அல்லது நடைமுறையில் மாலையில் மட்டும் இரவு 10 மணி வரை விளக்கொளி அமைக்கலாம். நாட்டுக்கோழிகள் 7 முதல் 8 மாத காலத்தில் முட்டையிட ஆரம்பிக்கின்றன. நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 150 முதல் 200 முட்டை வரை இடும் திறன் கொண்டவை.

உற்பத்தியாகும் அடைமுட்டைகளின் குஞ்சுபொரிப்புத்திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் பாதுகாக்கவேண்டும். வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதியளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும்.

அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரை தெளித்து பாதுகாத்து வந்தால் குஞ்சுபொரிக்கும் திறன் அதிகரிக்கும். வணிக நோக்கில் அதிக அடை முட்டைகளை பாதுக்காக்கும் போது முட்டைகளை முட்டை அட்டைகளில் சேமித்து முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்கவேண்டும். இதற்க்கு பொதுவாக குளிர்சாதன அறை போதுமானது.

சிறிய அளவில் அடை முட்டைகளைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்தினாலும் கரு வளர்ந்த முட்டையைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்துவதே சிறந்ததாகும். மின்சார குண்டு பல்பு அல்லது டார்ச் விளக்கு கொண்டு 7 ஆம் நாள் முட்டையை ஆராய வேண்டும். கரு வளர்ந்த முட்டையாக இருந்தால் ரத்தக்குழாய்கள் சிவப்பு நிறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்புடன் காணப்படும்.

நாட்டுக்கோழிகள் இயற்கையாக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போன்றே செயற்கையாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொறிக்க குஞ்சு பொரிப்பான்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. 40 முதல் 1 லட்சம் முட்டைகள் வரை வைக்கக்கூடிய குஞ்சு பொரிப்பான்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy DIY Arts and Crafts | How to make Coffee cup base for kids with 13 Ice Cream Sticks | GArts - 1

Sarkar Review | Vijay | AR Murugadoss | Keerthy Suresh | A R Rahman | Sarkar Movie Review

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

Manpaanai Meen Kulambu recipe in Tamil | Traditional Fish Curry | Gramathu Meen Kolambu

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: