முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளியம்கோம்பையில் சிறுத்தை தாக்கி ஆடு சாவு

புதன்கிழமை, 3 மே 2017      ஈரோடு

புளியம்கோம்பை ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த சிறுத்தை வெள்ளாட்டைத் தாக்கிக் கொன்றது.
சத்தியமங்கலம் வனத்தையொட்டி புளியம்கோம்பை கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் வனத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் ஆட்டுப்பட்டி வைத்து கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், வனத்தில் இருந்து வந்த சிறுத்தை, வடிவேல் என்பவரின் ஆட்டுப்பட்டிக்குள்  அதிகாலை புகுந்து வெள்ளாட்டைத் தாக்கியது. நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு வடிவேல் வெளியே வந்து பார்த்தபோது, வெள்ளாட்டை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் விடிய விடிய சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்தனர். தொடர்ந்து, சிறுத்தை நடமாடிய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை தேடியபோது பெரிய பாறைக்கு இடையில் ஆட்டின் பாதி உடல் தென்பட்டுள்ளது. ஆட்டின் வயிற்றுப் பகுதியைத் தின்றுவிட்டு பாதி உடலை சிறுத்தை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் ஆடுகளை சிறுத்தை கொன்று வருவதால், கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
கால்நடைகள் இழப்பால் கூலித் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்