நீலகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக்குழுத்தலைவர் கரி.ராமசாமி பல்வேறு வளர்ச்சிப் பணிக கலெக்டர் பொ.சங்கர் முன்னிலையில் ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 11 மே 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில்தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக்குழுத்தலைவர் திரு.கரி.ராமசாமி அவர்கள் ரூ.48.60 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் .. அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

சாலைப்பணிகள்

ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட கலெக்டர் அவர்களின் விருப்ப நிதியில் முத்தநாடு மந்து பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டிலான 350 மீட்டர் அளவில் முடிக்கப்பட்ட சாலைப்பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக்குழுத்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
பின்னர் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட அனுமாபுரம் பகுதியில் தலா ரூ.2,10,000 வீதம் என ரூ.14,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 7 பசுமை வீடுகளை ஆய்வு செய்தனர். அதன்பின் பொதுநிதி திட்டத்தின்கீழ் நடுவட்டம் பகுதியில் ரூ.20 இலட்சம் மதிப்பட்டில் நடுவட்டம் வணிக வளாகம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை பொது கணக்குக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: