முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      கடலூர்
Image Unavailable

கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் குறித்து ஆய்வு

கலெக்டர் டி.பி.ராஜேஷ், ,  10.05.2017 அன்று குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தங்கோயில் ஊராட்சி செட்டிமுட்டு கிராமத்தில் ரூ.16000- மதிப்பீட்டில் 30 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் கைபம்பு பணி, வக்காரமாரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3.5 கி.மீ நீளமுள்ள மெயின்ரோடு வக்காரமாரி பாசன வாய்க்காலில் ரூ.4.88 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் தொகுப்பு திட்டம் 2015-16ன் கீழ்  ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளியங்கால் ஓடையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையையும், சர்வராஜன்பேட்டை ஊராட்சியையும் இணைக்கும்  உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுரை

இந்த ஆய்வின்போது செட்டிமுட்டு குக்கிராமத்தில் பொதுமக்களிடம் குடிதண்ணீர் கைபம்புலிருந்து தொடர்ந்து வருகிறதா என்பதையும், குடிநீர் பிரச்சனைகள் ஏதும் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார். தண்ணீரை வீணாக்காமல் சிக்கமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். சட்டவிரோதமாக குடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் வீடுகளில் தண்ணீரை உறிஞ்சுவதை கண்டறிந்து உடனடியாக நோட்டீஸ் கொடுத்து இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தூர்வாரும் பணி

வக்காரமாரி ஊராட்சியில்; மெயின்ரோடு வக்காரமாரி பாசன வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியில் பணியாற்றி கொண்டிருந்த மக்களிடம் வேலைக்கான பணம் தடையின்றி வருகிறதா என்பதைக் கேட்டறிந்தார். வேலை கொடுக்கப்படும் கையேட்டினை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களும் உடனிருந்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பூராசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சுகுமார், உதவி பொறியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்