முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சித்தர்கள் சிறப்பு தின விழா மாநாட்டினை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 15 மே 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருட்காட்சியகம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்திய சங்கம் மற்றும் சட்ட நாதர் சித்தர் சார் கழகம் இணைந்து நடத்தும் சித்தர்கள் சிறப்பு தினவிழா மாநாடு ஓட்டல் தமிழ்நாடு வளாகம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.

சித்தர்கள்

இம்மாநாட்டில் பேசிய மாவட்ட கலெக்டர் அவர்கள் முற்காலம் தொட்டு சிறப்பு மிக்க இந்த காஞ்சி மாநகரம் சமணம், புத்தம், சைவம், வைணவம் என அனைத்து மதங்களும் வளர்ந்த வரலாற்று இடமாகும். இந்நகரம் நாளந்தா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தர்மபாலர் மற்றும் போதிதர்மர் போன்ற சான்றோர்கள் வாழ்ந்த இடமாகும்.

18 சித்தர்கள் தங்களது முயற்சியால் இயற்கையான முறையில் உருவாக்கிய பல மூலிகைகள் நமக்கு கிடைத்த அரும்பொருள்களாகும். சித்தர்களை அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் என்று எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள், உதாரணமாக மூலை வடிவம் உடைய இலையான வல்லரை கீரை நினைவாற்றலை பெருக்கும் அதனால் தான் சித்தர்கள் சரஸ்வதி என வல்லரைக் கீரையை அழைத்தனர். மூட நம்பிக்கைகளையும் அறிவுக்கு பொருந்தாதவற்றையும் எதிர்த்த சீத்தர்கள் என் பார்வைக்கு சீர் திருத்தவாதிகளே குறிப்பாக கடுவெளி சித்தர் மற்றும் இடைக்கழிநாட்டு சித்தர் ஆகியோர் இந்த காஞ்சி மாநகரைச் சார்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைபட வேண்டும் நண்பர்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள் வான வாஸ்திரம் பூமியின் தட்பவெப்பநிலை, மழை, புயல், ஆகியவற்றை கணித்து முறையாக பின்பற்றினர்.

சித்தர்கள் ஜோதிடவியலிலும் சிறந்தவர்கள் கேரளாவில் நோய்களுக்கு மணி, மந்திர, அவுசதம் என்ற 3 என்றாலும் சிகிச்சை அளிப்பதை இன்றும் நீங்கள் பார்க்கலாம். அருணகிரியாரின் மெய்ஞானத் தமிழில் மூழ்கி திளைத்த வள்ளலாரும் தாயுமானவரும் சித்தர்களை முன் வைத்து எண்ணத்தக்ககவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அரிய பல சித்த மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்காமல் போனதற்கு நம்மிடையே முறையான ஆவணப்படுத்துதல் இல்லாமல் போனதே காரணம் பல நோய்களுக்கு சித்தர்கள் மருந்துகளை உண்டாக்கியுள்ளனர். அவைகள் நமக்கு கிடைத்திருந்தால் மருத்துவ உலகில் தமிழர்கள் தனி இடம் பிடித்திருப்பர். தமிழகம் முழுவதிலிரும் இருந்து வந்திருக்கும் சித்த மருத்துவர்களை காணும் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

"உணவே மருந்து" என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை யாரலும் மறக்க முடியாது அது போல சித்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது இது போன்ற தமிழர்களின் பாரம்பரியம் மிக்க நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அரிய வகை மூலிகைகள் மற்றும் இயற்கை முறையில் உணவு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கையை வாழவும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்கும். மேலும், அரிய இந்த மனித உடலை பேணி காப்பது சித்த மருத்துவம் அரிய பல பொக்கிஷங்களை பேணிகாப்பது அருங்காட்சியகம் அப்படிப்பட்ட இந்த இடத்தில் இந்நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் பணியாளர்கள் மற்றும் அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள் இந்த நிகழ்வை பயன்படுத்தி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாநாட்டுக் குழு தலைவர்.மரு.வி.ஜோதி பிரகாசம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்தியர் சங்கம் மரு.ஆர்.நடராஜன், அரசு அருங்காட்சியகம், காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago