பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருவள்ளூர்
Ponneri 2017 05 19

தமிழகத்தில் நடைப்பெற்ற 2016-2017 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வுகள் நடைப்பெற்றது.இதற்கான தேர்வு மதிப்பெண்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இனிப்புகள்
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அப்பள்ளி மாணவிகள் பி.எஸ்.சுஜா ஷாமினி என்பவர் 500/498 தமிழ்-99,ஆங்கிலம்-99,கணிதம்-100,அறிவியல்-100,சமூக அறிவியல்-100 மதிப்பெண்களும்,.எஸ்.ஜெயந்தி என்பவர் 500/496,தமிழ்-99,ஆங்கிலம்-97,கணிதம்-100,அறிவியல்-100,சமூக அறிவியல்-100 மதிப்பெண்களும்,500/495 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவ,மாணவிகளும் சாதனை படைத்துள்ளனர். பாடவாரியாக மொத்தத்தில் 132 மாணவ,மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெரியபாளையம் காவல்துறை அதிகாரி பழனி என்பவர் மகள் சுஜாஷாமினி,பொன்னேரியைச் சேர்ந்த வியாபாரி செல்வதுரை என்பவர் மகள் ஜெயந்தி இவர்கள் உள்ளிட்ட தேர்வு மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதனை படைத்த அனைவரையும் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களையும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எம்.வி.எம்.சசிகுமார்,பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் பாராட்டினர்.மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: