காஞ்சிபுரத்தில் 1426ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் தீர்வாக பட்டா பெயர் மாறுதலுக்கான ஆணைகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 05 19

காஞ்சிபுரம் வட்டத்தில் 1426ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் உயர்திரு மாவட்ட கலெக்டர் காஞ்சிபுரம் அவர்களின் தலைiiயில் நடைபெற்று வருகின்றது. மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் ஆறு குறுவட்டத்தைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டு இவற்றில் பட்டா மாற்றம், குடும்ப அட்டை, விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, நலிந்தோர் உதவித்தொகை தொடர்பான மனுக்களும் பெறப்பட்டு, மேற்படி பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

20 நபர்களுக்கு

மேலும் பிற துறைகள் தொடர்பான மனுக்களை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி 1 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து இறுதி ஆணை பிறப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இன்று (19.05.2017) சிறுகாவேரிப்பாக்கம் , விஷார், சடந்தாங்கல், புத்தேரி, கீழம்பி, மேல்கதிர்பூர், மங்கல்பாடி, மேட்டுக்குப்பம், நரப்பாக்கம், விப்பேடு, ஆளவந்தார் மேடு மற்றும் கோவிந்தவாடி உள்வட்டம், ஈஞ்சம்பாக்கம், விஷகண்டிகுப்பம்,பெரிய கரும்பூர், புதுப்பாக்கம், ஊவேரி, புத்தேரி, மணியாட்சி, வெளியூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இன்று 20 நபர்களுக்கு உடனடி தீர்வாக பட்டா பெயர் மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் அவர்கள் வழங்கினார். வருவாய் தீர்வாயத்தின் இறுதி நாளான 30.05.2017 செவ்வாய் கிழமை மாலை ரயத்து கூட்டம் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், உதவி இயக்குநர் (நிலஅளவை) முத்தப்ப ரெட்டி, வட்டாட்சியர்/மேலாளர் இளங்கோ, வட்டாட்சியர் கியூரி, மண்டல துணை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: