புதிய தொழில் முனைவோர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் ராஜேஷ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கடலூர்

தமிழக அரசு கடலுர் மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளது.  அரசு மானியத்துடன் கடன் பெற்று புதிய தொழில் துவங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய  தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி போன்ற பிரிவுகளில் கல்வித் தகுதிக்கேற்ப அதிகபட்சம்  ரூ.100.00 இலட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கடன் பெற புதிய தொழில்களை துவக்க அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. 

 ஊக்குவிப்பு முகாம்

இதன் ஒரு பகுதியாக மாவட்டதொழில் மையம் மூலம் சிறந்த தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் துவங்க வழிகாட்டும் விதமாக ஊக்குவிப்பு முகாம் கடலுhர் மாவட்டத்தில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நடைபெற உள்ளது. சுயமாக தொழில் துவங்க ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 

பயன்பெற வேண்டுகோள்

முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தொழில் துவங்க ஆலோசனைகள்,  திட்ட தயாரிப்பு, தொழில் வாய்ப்புகள், அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் மானியங்கள்,  உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் , மேலும் விவரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுhர் அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.04142-290116 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் எனவும் கடலுhர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ),   கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: