கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      கடலூர்
cuddalure collector 2017-05 28

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தெரிவித்ததாவது,

பணி முன்னேற்றம் குறித்து

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர்  ஆய்வு செய்தார். வேளாண்மை துறை அலுவலர்கள் பொதுப்பணித்துறை நீர்நிலைகளுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

அறிவுரை

அனைத்து அலுவலர்களும் பொதுமக்களிடம் தகவல் அளித்து மண் எடுக்க அனுமதி கோரும் மனுவினை பெரும் எண்ணிக்கையில் பெற்று உடன் மண் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜமாபந்தியின் போது பொதுமக்களிடம் மனு பெற்று மண் எடுத்துச் செல்வதற்கான அனுமதியை உடன் வழங்குமாறு கலெக்டர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ்,  மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஆர்.சேதுராமன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மதிவாணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து