திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 31 மே 2017      திருப்பூர்
dd

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி  மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில் நடைபெற்றது.

தேர்திருவிழா

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு. விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா 07.06.2017 மற்றும் 08.06.2017 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த திருக்கோயில்களுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்படி விழாவின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்குவதுடன் இவ்விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக ஓர் ஒழுங்கு வரிசை ஏற்படுத்தி தேவைக்கேற்ப காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரை பணியில் அமர்த்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல். மேற்படி விழாவின் போது கோயில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய அளவில் இடவசதி செய்தல்.  மேலும், வாகன போக்குவரத்தினை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், உரிய நடவடிக்கையினை மாநகர காவல் துறையினர்  மேற்கொள்ள வேண்டும்.

பக்தர்கள் கூடும் இடம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திருக்கோயில்களின் தேர் திருவிழாவின் போது கோயில்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், திருக்கோயிலில் பக்தர்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.   தேரோடும் வீதிகளை செப்பனிடுதல், தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள் தனித்தனியாக அமைத்தல் மற்றும் தேவையான குப்பைத்தொட்டிகள்  வைக்க வேண்டும்.  அப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் ஆக்கிரமணம் ஏற்படாது, காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து கண்காணித்தல். மேலும், திருக்கோயில்களை சுற்றியுள்ள வீதிகளில் போதிய அளவு மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளல். திருக்கோயில்களை சுற்றியுள்ள தெருக்களை செப்பனிடவும் வேண்டும்.

சிறப்பு பேருந்துகள்

மேலும், மண்டல மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர், திருப்பூர்(தெற்கு) திருக்கோயில்களின் தேர் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்திட ஏதுவாக, சூழ்நிலைக்கேற்ப தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் சுகாதாரம்)   திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது சுகாதாரம் பேணுதல் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைப்பதோடு, மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பணியில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல். தேரோட்டத்தின் போது உரிய மருத்துவர்கள் குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம்  ஒன்று உடன் சுற்றி வரவேண்டும்.  தீ தடுப்பு  மற்றும்  மீட்பு பணிகள் துறை  தேர் திருவிழாவினை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் தீயணைப்பு வாகனம் இரண்டு தயார் நிலையில் தண்ணீருடன் கோயில்களுக்கு அருகில் நிறுத்த வேண்டும்.

மின்தை ஏற்படா வண்ணம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை முன்னிட்டு 07.06.2017 மற்றும் 08.06.2017 வரை அப்பகுதியில் மின்தடை ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்தல். தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் குறுக்காகச் செல்லும்  மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்திக்கொடுக்க வேண்டும். தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.  இத்தேர்திருவிழாவிற்கு பெருமளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது என்பதால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் உறுதி தன்மையை தணிக்கை செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தேர் திருவிழாவினை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவேண்டும் மற்றும் தேரோடும் சாலைகளில் உள்ள குழிகளை தார் போட்டு நிரப்பி செப்பனிட்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசல்

இந்து சமய அறநிலைத்துறையினர்  தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில்  உரிய மூங்கில் தடுப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளல்.  பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய  உரிய  அனைத்து ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அனைத்து பணிகளையும் கண்காணித்திட வேண்டும். திருப்பூர்  சார் கலெக்டர், அனைத்து துறை சார்ந்த பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு மேற்படி திருப்பூர் தெற்கு வட்டம் மற்றும் மாநகரில்  அமைந்துள்ள அருள்மிகு.விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை சீரிய முறையில் நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து தேர்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்சினி,திருப்பூர் மாநகர பொறியாளர்  ரவி, மாநகர் நல அலுவலர் மரு. பூபதி, காவல் துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து