திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்கள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருப்பூர்
12a

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் பொங்கலூர் ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்களை   வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்   இன்று (04.06.2017) திறந்து வைத்தார்கள்.

புதிய கட்டிடங்கள்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி,  குன்னங்கல் பாளையத்தில் ஊராட்சிப் பொது நிதியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பொருட்கள் இருப்பு அறையினையும், சென்னிமலைப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த  கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தினையும், அவரப்பாளையத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் ரூ.5.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த நியாய விலைக்கடை கட்டிடத்தினையும், கணபதிபாளையம் ஊராட்சி, எஸ்.எம்.சி. நகரில்  மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த  அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும்,  பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி, குமாரபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த  பல்நோக்கு  மைய கட்டிடத்தினையும்,  கண்டியன்கோவில் ஊராட்சி, மருதுறையான்வலசில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், காட்டூர் ஊராட்சி, இந்திரா காலனியில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த  அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், வடமலைபாளையம் ஊராட்சி, வடமலைபாளையத்தில்  மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த  கிராம ஊராட்சி பொது சேவை மைய கட்டிடத்தினையும், எலவந்தி ஊராட்சி , வடுகபாளையத்தில்  மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த கிராம  ஊராட்சி பொது சேவை மைய கட்டிடத்தினையும் மற்றும் வாவிபாளையம் ஊராட்சி, கொசவம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம்  மதிப்பில் கட்டப்பட்டிருந்த  அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் என  ரூ.92.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்களை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, பொங்கலூர் மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து