ஊட்டி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      நீலகிரி
4ooty-3

ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நற்செய்தி கூட்டங்கள்

ஊட்டி சேரிங்கிராஸ் அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ளது தூய இருதய ஆண்டவர் பேராலயம். இங்கு ஆண்டுதோறும் ஒரு வார காலம் திருவிழா நடைபெறும். அதன் படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி ஆலய பங்குத்தந்தை ஜான் ஜோசப் கொடியை மந்திருத்து ஏற்றி வைத்தார். அதன்பின்னர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு சிறப்பு திருப்பலிகள், நவநாள், நற்செய்தி கூட்டங்கள் நடைபெறும்.

கூட்டுத்திருப்பலி

ஒரு வார காலம் நடைபெறும் விழாவின் இறுதி நாள் விழா வரும் 12_ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து சிறுவர்களுக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து புதுநன்மை நடைபெறும். மாலையில் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத்தந்தை ஜான் ஜோசப் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து