முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழுவினர் தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு

புதன்கிழமை, 7 ஜூன் 2017      கோவை
Image Unavailable

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நூலகங்களில் வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் மற்றும் பயனாளர்கள் குறித்தும், நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து நூலகவரி நிலுவை குறித்தும், கிராமப்புற பகுதிகளில் அதிக நூலகங்களை தொடங்குவது, செயல்படுகிற நூலகத்திற்கு நிறைய புத்தகங்கள் வாங்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பந்தலூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு 2016ம் ஆண்டில் கட்டிடம் திறக்கப்பட்டு நூலகம் செயல்பட்டு வருவதையும் கேட்டறிந்தனர்.

மாவட்ட மைய நூலகம்

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை நூலக தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் மாவட்ட மைய நூலகத்தினை ஆய்வு செய்தனர். அப்போது பத்திரிகை மற்றும் நாளிதழ் பிரிவு, நூல் இரவல் பிரிவு, குடிமைப்பணி பிரிவு, நூல் கலந்தறிதல் பிரிவு, இணையதளப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, நகல் எடுக்கும் பிரிவு, நூல் சேர்க்கைப்பிரிவு, மகளிர் பிரிவு, மின்னணு பத்திரிகை பிரிவு ஆகிய தனித்தனி பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், சட்டமன்ற பேரவை நூலக்குழு உறுப்பினர்கள்  ஆண்டி அம்பலம், கு.கா.செல்வம், ராமர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து