முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு விஷால் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, படத்தின் வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு விஷால் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்றும் நோக்கிலும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதை தவிர்க்கவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, அனைத்து தயாரிப்பாளர்களும் படத்தின் வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தயாரிப்பாளர் முதலாளிகளுக்கு வணக்கம்.... தற்போது நமது திரைத்துறையில் நிலவி வரும் திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் வெளியீட்டிற்கு தயாராக இருககும் திரைப்படங்கள் ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு தேதியினை உடனடியாக நமது சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து