முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கலப்பு இரட்டையர்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முன்னதாக, 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஹவக்கோவா (செக்குடியரசு)- ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அபார வெற்றி

இந்நிலையில், இறுதிப் போட்டியில், போபண்ணா ஜோடி, ராபர்ட் பாரா (கொலம்பியா), அன்னலெனா குரோனிபெல்டு (ஜெர்மனி) இணையை எதிர் கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போபண்ணா ஜோடி முதல் சுற்றினை 2-6 என்ற கணக்கில் பரிகொடுத்தது. இருப்பினும் பின்னர் தனது அபாரமான ஆட்டத்தால் இந்த ஜோடி அந்த இரண்டு  சுற்றுகளை 6-2, 12-10 என்ற செட் கணக்கில் கைப்பற்றி, வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் போபண்ணா தனது முதல் கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து