எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற வதந்தி பரவியது. 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்தனர்.
சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது. நேற்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப காத்திருந்தன. வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கூட டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக் கொள்வதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர். தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


