Idhayam Matrimony

சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
Eps   2024-12-02

சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15.3.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், தனியார் மஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள். தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து