மேல்மலையனூர் அங்காளம்மன் உண்டியலில் பக்தர்கள் ரூ.36 லட்சம் காணிக்கை

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      விழுப்புரம்
Devotees donated counting work 2017 06 16

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலய திருக்கோயில்  வைகாசி மாத உண்டியல் எண்ணும் பணி புதன் அன்று தொடங்கி வியாழன் காலை வரை  நடைபெற்றது

உண்டியல் எண்ணும் பணி

இதில் ரூ.36,26,625 இலட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், திருவண்ணாலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், செஞ்சி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறப்பு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக ரூ.36 லட்சத்து 26 ஆயிரத்து 625. மற்றும் தங்கம் 213 கிராம், வெள்ளி 593 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.மேலாளர் மணி, சத்தீஷ்  உள்ளிட்ட திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வளத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து