எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை மருத்துவமனைகளில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் வரும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூடிய பல்வேறு பிரச்னைகளில் சிறுநீர்ப்பை கோளாறும் ஒன்று. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் ஆறில் ஒருவர் சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தப் பாதிப்பால், சிறுநீர்ப்பை நிரம்பி, உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சில சமயம், வயதானோருக்கு தெரியாமலேயே சிறுநீர் வெளியேறிவிடும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பிவிட்டதாக, மூளைக்கு தவறான தகவல்களை சிறுநீர்ப்பையில் உள்ள நரம்பு செல்கள் அனுப்புவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மூலமாக முழுமையாக இந்தக் கோளாறை முழுமையாகக் குணமடையச் செய்ய முடியும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மருத்துவமனைகளில் ஜூன் 19-ம் தேதி முதல் ஒரு வாரம் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மருத்துவர் ஆ.எம். சதீஷ்குமார் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறு காரணமாக உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு வயதானவர்களிடம் ஏற்படும். சில சமயம் அவர்கள் கழிவறைக்கு செல்வதற்குள், சிறுநீர் வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 8 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூட இந்தப் பிரச்சனையை சமுதாயம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. குழந்தைகளை போல வயதானோரும் அவர்களுக்கு தெரியாமலேயே சிறுநீர் கழிக்கின்றனர் என்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது, என்றார்.
இதுகுறித்து மேலும் மதுரையில் உள்ள திண்டுக்கல் கிட்னி சென்டர் மருத்துவர் ஆர்.நாகராஜன் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவிக்க வெட்கப்படுகின்றனர். உடலரீதியான பல பிரச்னைகள் போல, இதுவும் ஒரு பிரச்னைதான். முதலில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், அதுகுறித்து மருத்துவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். உணவு முறையில் மாற்றம், தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றின் மூலமாக சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.


