தமிழின் தனித்தன்மையை குறைக்க மோடி அரசு முயற்சி- ஜி.கே.வாசன்

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      அரசியல்
GK Vasan(N)

சென்னை, செம்மொழி ஆய்வு நிறுவன விவகாரம் தொடர்பாக தமிழின் தனித்தன்மையை குறைக்க மோடி அரசு முயற்சி மேற் கொண்டு வருகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தேனாம்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் தனித்தன்மை யோடு இருக்க வேண்டும். செயல்பட வேண்டும். மத்திய அரசு இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி மேற் கொண்டு வருகிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும்.இந்த நிறுவனம் தனித் தன்மையோடு செயல்பட்டால் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அதை நீர்த்து போகும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இரு கண்டனத்துக்குரியது. தமிழின் தனித்தன்மையை குறைக்கும் செயல் ஆகும். உடனே மத்திய அரசு பழைய நிலையிலேயே இந்த நிறுவனம் செயல்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து