முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில்,  மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில்,  நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின் போது, போலீசார் அடித்துக்கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருபுவனம் மாவட்ட டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அஜித் குமார் மரணம் தொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிப்பார். நீதிபதி விசாரிப்பார் என்றால், அது நீதி விசாரணை என்றே அழைக்கப்படும். ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 1) மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றிடிபேன் வாதிடுகையில், போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார், விசாரணையின் போது தப்பி ஓட முயன்றது போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக காவல்துறையினர் நாடகமாடியுள்ளனர்” என்றார்.

வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், “ அஜித்தை மடப்புரம் கோயில் பின்னால் வைத்து போலீஸார் சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.” என்று கூறி அந்த வீடியோவை நீதிபதிகளிடம் வழங்கினார்.

இதையடுத்து நீதிபதிகள்,  அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை?. அவரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்.” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து