முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 128 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் முனைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர்.

சாலை, குடிநீர் வசதி


நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக்கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 128 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிம் வழங்கினர். இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

                                  ஆவணங்கள் சரிபார்ப்பு


முன்னதாக ஊட்டி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அரசு மணல் குவாரி வாகன ஆவணங்கள் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை
மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர்(கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப்பாட்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து